ஆசையாக சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த சாம்பார் சாதம்.! கூடவே 50 ஆயிரம் பணமும் சுருட்டல்.!



Man lost 50 thousands ordering chicken biriyani

ஹைதராபாத்தை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து 50 ஆயிரம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் ரஹ்மத் நகரைச் சேர்ந்த அந்த மென் பொறியளர் ஒருவர் ஸொமாட்டோவின் ஃபுட் டெலிவரி ஆப்பில் ஸ்பெஷன் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

பிரியாணி ஆர்டர் செய்து சிறிது நேரத்தில் அவருக்கு பிரியாணிக்கு பதில் சாம்பார் சாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான அவர் ஸொமாட்டோவின் வாடிக்கையாளர் எண்ணை கூகுளில் தேடி அதற்கு கால் செய்துள்ளார்.

எதிர் முனையில் பேசியவர் ஸொமாட்டோவின் வாடிக்கையாளர் மைய்ய அதிகாரிபோலவே பேசி, உங்கள் பணத்தை நான் திரும்பி தருகிறேன் என்றும், உங்கள் தொலைபேசிக்கு தற்போது ஒரு கியூ ஆர் கோடு அவரும், அதை ஸ்கேன் செய்தால் பணம் வந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.

Crime

இதனை நம்பி அந்த மென் பொறியாளர் அந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளார். அடுத்த நொடியே மென் பொறியாளரின் வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர் இதுகுறித்து ஹைதராபாத் இணையதள குற்றங்கள் உதவி போலீஸ் கமிஷனரைச் (ACP) சந்தித்து புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடிவருகின்றனர். மேலும், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஸொமாட்டோ நிறுவனம்,  நாங்கள் வாடிக்கையாளர்களிடம் எங்களிடம் கஸ்டமர் கேர் சேவை எண் கிடையாது. ஆன்லைன் சாட் மற்றும் மெயில் சேவை மட்டுமே உள்ளது என்று தொடர்ந்து கூறிவருகிறோம். எனவே வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என கூறியுள்ளது.