மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
35 வருட காத்திருப்பு! 65 வயதில் கைக்கூடிய காதல்! அடேங்கப்பா..என்னவொரு ஆச்சர்யமூட்டும் லவ் ஸ்டோரி.!
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே ஹெப்பாலா என்ற பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா. 65 வயது நிறைந்த அவர் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு தன் வீட்டிற்கு அருகே வசித்துவந்த ஜெயம்மா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜெயம்மா சிக்கண்ணாவின் காதலை ஏற்காத நிலையில் அவருக்கு மற்றொரு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் அவரது திருமண வாழ்க்கை வெகு காலங்கள் நீடிக்கவில்லை. ஜெயம்மாவுக்கு குழந்தை பிறக்காததை காரணம் காட்டி அவரது கணவர் ஜெயம்மாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஆங்காங்கு வீட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையில் சிக்கண்ணா வேறு திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல், உருகி உருகி தனது காதலியையே நினைத்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது 65 வயதில் சிக்கண்ணாவின் காதல் கைக்கூடியுள்ளது. அதாவது 35 வருடங்களுக்கு பிறகு உண்மையான காதலை புரிந்து கொண்டு ஜெயம்மா சிக்கண்ணாவை ஏற்றுகொண்டுள்ளார். அவர்களது திருமணம் நேற்று மாண்டியா மேல்கோட்டையில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் அந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.