மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர்... 6 வயது சிறுவன் கொலை... 14 வயது சிறுமி கற்பழித்த பெரியப்பா.! மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்.!
கேரளாவில் சொத்து தகராறு காரணமாக ஆறு வயது சிறுவனை கொலை செய்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனையுடன் 92 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கும் அவரது அண்டை வீட்டில் வசித்து வந்த அவரது மனைவியின் சகோதரி குடும்பத்திற்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் 2021 ஆம் வருடம் அக்டோபர் மாதம் திடீரென அந்த வீட்டிற்குள் நுழைந்த ஷாஜகான் அங்கிருந்த வயது முதிர்ந்த மூதாட்டியை சத்தியலால் தலையில் தாக்கி இருக்கிறார். பின்னரங்கு விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவனின் தலையிலும் சுத்தியலால் அடித்துள்ளார். இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அவர் தன் மனைவியின் சகோதரியின் தலையிலும் சுத்தியலால் தாக்கி இருக்கிறார். பின்னர் 14 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என மாநிலம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்து வந்தன. போகோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் 74 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி. இந்தத் தீர்ப்பில் ஆறு வயது சிறுவனை கொலை செய்ததற்காக மரண தண்டனையும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது அவரது தாய் மற்றும் பாட்டியை கொலை செய்ய முயற்சித்தது என இவற்றிற்கு தண்டனையாக 92 வருடங்கள் திரை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.