பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
பயங்கர சம்பவம்... மது போதையில் தகராறு.!! கணவனை போட்டுத் தள்ளிய மனைவி, மைத்துனர் கைது.!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மைத்துனர் சேர்ந்து கணவரை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்த மாரிமுத்து
தஞ்சாவூர் மாவட்டம், சாத்தனூர் கிராமம், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மாரிமுத்து. 29 வயதான இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மாரிமுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அஞ்சலை மற்றும் மாரிமுத்து இடையே தகராறு ஏற்பட்டதால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார் மாரிமுத்து.
இரண்டாவது திருமணம்
விவாகரத்து பெற்ற மாரிமுத்துவுக்கு பிரியா என்ற 21 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவை திருமணம் செய்து அவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார் மாரிமுத்து. இந்நிலையில் ஜூலை 6 ஆம் தேதி மாரிமுத்து, அவரது மனைவி பிரியா மற்றும் முதல் மனைவியின் சகோதரர் மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி... கள்ளக்காதலியுடன் உல்லாசம்.!! நேரில் பார்த்த முதியவருக்கு அரிவாள் வெட்டு.!!
கொலையில் முடிந்த தகராறு
மது அருந்தும் போது மாரிமுத்து, மணிகண்டன் மற்றும் பிரியா இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பிரியா ஆகியோர் வீட்டிலிருந்த அரிவாள் எடுத்து மாரிமுத்துவை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை வீட்டின் தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
விசாரணையில் வெளியான உண்மை
மாரிமுத்து வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாரிமுத்துவின் மனைவி பிரியாவிடம் விசாரணை செய்தபோது மது போதையில் மணிகண்டனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தோட்டத்தில் புதைக்கப்பட்ட மாரிமுத்துவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலை செய்த பிரியா மற்றும் மணிகண்டனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருச்சி அருகே கொடூரம்... 69 வயது மூதாட்டி படுகொலை.!! தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் உட்பட 4 பேர் கைது.!!