திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாழ்க்கையை புரட்டிப்போட்ட வீண் சந்தேகம்: தாழ்வு மனப்பான்மையால் பறிபோன உயிர்..!
உத்திர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் விகாஸ் மீனா. இவருக்கு வேலை எதுவும் இல்லை. இவரது மனைவி காம்யா. இவர் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.
இதற்கிடையில், வங்கி மேலாளரான தனது மனைவி காம்யாவின் நடத்தையில் விகாஸ் மீனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இது குறித்து அவரிடம் விவாதம் செய்த்தால் இருவருக்கு இடையில் அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வங்கியில் பணிபுரியும் காம்யா தனது சக ஊழியர்களுடன் நெருங்கி பழகியதால் அவருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மீண்டும் தம்பதியினரிடையே வாக்கு வாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த விகாஸ் மீனா, காம்யாவை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக 2 வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விகாஸின் தந்தை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த காம்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காம்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே மாடியில் இருந்து குதித்த விகாஸ் மீனா, தலை மற்றும் கால்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.