ஹெல்மெட் உள்ளே இருந்த விஷ பாம்பு..! 11 கிலோமீட்டர் சென்ற பிறகு இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!



Man ride bike without knowing snake inside in his helmet

கொடிய விஷமுள்ள பாம்பு ஓன்று ஹெல்மெட்டில் இருப்பது தெரியமால், பாம்புடன் சேர்த்து ஹெல்மெட்டையும் அணிந்துகொண்டு இளைஞர் ஒருவர் 11 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவர் கடந்த 5 ஆம் தேதி வேலை காரணமாக தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் வெளியே கிளம்பியுள்ளார். பைக்கில் சென்ற ரஞ்சித் தனது பாதுகாப்பிற்காக வீட்டில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டி சென்றுள்ளார்.

சுமார் 11 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித் தனது ஹெல்மெட்டை கழட்டும்போது அதில் கொடிய விஷம் கொண்ட பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே தனது நண்பருக்கு தகவல் கொடுக்க, இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று பாம்பு ரஞ்சித்தை கடித்துள்ளதா என சோதனை செய்தனர்.

மருத்துவ அறிக்கையில் பாம்பு ரஞ்சித்தை கடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் சற்று நிம்மதி அடைந்த ரஞ்சித், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும் தனது ஹெல்மெட்டை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் பற்றி அவர் கூறுகையில், பாம்பு ஹெல்மெட் உள்ளே இருக்கும்போது தான் வித்தியாசமாக எதையும் உணரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இளைஞர் ஒருவர் பாம்பு இருக்கும் ஹெல்மெட்டை அணிந்து உயிர் தப்பியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.