மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் கண்முன்னே நண்பனை கவ்வி இழுத்துசென்ற முதலை! ஹீரோவாக மாறி வாலிபர் செய்த அசத்தல் காரியம்!
போபால் பகுதியைச் சேர்ந்தவர்கள் அமித் ஜாதவ் மற்றும் கஜேந்திரா சிங். 30 வயது நிறைந்த இவர்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு போபால் பகுதியிலுள்ள காலியாசாட் என்ற அணைக்கு குளிக்கச் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் இருவரும் சற்று ஆழமான பகுதிக்கு சென்று நீந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது திடீரென அமித் ஜாதவ்வின் தொடைப்பகுதியை முதலை ஒன்று கவ்வி அவரை இழுத்துசென்றுள்ளது.
உடனே சுதாரித்துக் கொண்ட அவரது நண்பர் கஜேந்திரன், சற்றும் யோசிக்காமல் வீடியோ எடுப்பதற்காக வைத்திருந்த செல்பி ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு அவரை பின்தொடர்ந்து நீந்தி சென்றுள்ளார். பின்னர் அதனை வைத்து முதலையின் முதுகில் ஓங்கி தொடர்ந்து குத்திய நிலையில், முதலை அதன் பிடியை தளர்த்தியது.
பின்னர் முதலை அங்கிருந்து சென்ற பிறகு, கஜேந்திரன் தனது நண்பனை இழுத்துக்கொண்டு கரைக்கு சென்றார். பின்னர் ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அமித் ஜாதவிற்கு தொடையில் 30 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்து கஜேந்திரன் மிகவும் படபடப்புடன் போலீசாரிடம் கூறியுள்ளார்.