மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்! விரைந்து வந்த ரயில்! பதற வைக்கும் வீடியோ!!
தண்டவாளத்தில் தலைவைத்து நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதனைக் கண்ட ரயில் ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மும்பை ஷிவ்டி ரயில் நிலையத்தில் நபர் ஒருவர், ரயில் வருவதைக் கண்டு தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ரயில் அருகில் வந்த நிலையில் தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியுள்ளார்.
உடனே அங்கிருந்த ரயில்வே பெண் போலீசார்கள் அவசரஅவசரமாக விரைந்து தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை மீட்டு தண்டவாளத்தில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி ஒரு உயிரை காப்பாற்றிய ஓட்டுநரை பாராட்டி ரயில்வே அமைச்சகம் அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
मोटरमैन द्वारा किया गया सराहनीय कार्य : मुंबई के शिवड़ी स्टेशन पर मोटरमैन ने देखा कि एक व्यक्ति ट्रैक पर लेटा है उन्होंने तत्परता एवं सूझबूझ से इमरजेंसी ब्रेक लगाकर व्यक्ति की जान बचाई।
— Ministry of Railways (@RailMinIndia) January 2, 2022
आपकी जान कीमती है, घर पर कोई आपका इंतजार कर रहा है। pic.twitter.com/OcgE6masLl
அது தற்போது வைரலாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. மேலும் அந்த வீடியோவை கண்ட பலரும் அந்த ரயில் ஓட்டுனருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.