திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பறக்கும் விமானத்தில் போதை தலைக்கேறி பயணி செய்த முகம் சுளிக்க வைக்கும் செயலால், அவமானத்தில் குறுகிய பெண்.!
விமானத்தில் பயணித்த, ஆண்பயணி ஒருவர் போதையில் அருகில் இருந்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த போதையில் இருந்த பயணி ஒருவர்,தனது அருகில் இருந்த பெண்பயணி மீது திடீரென பேண்டை கழட்டி சிறுநீர் கழித்துள்ளார்.
இதனால் அந்தப்பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளான இந்திராணி கோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவமானமாக உள்ளது ஏர் இந்தியா, நேற்று தனியாக குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் தன்னுடைய பேண்ட்டை அவிழ்த்து தனியாக பயணம் செய்த என் அம்மா உட்கார்ந்திருந்த இருக்கை மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து கஸ்டமர் கேருக்கு போன் செய்தபோது அவர்கள் சரியாக உதவவில்லை என்று குற்றம்சாட்டி பதிவிட்டிருந்தார்.
இவரது டீவீட்டிற்கு பதில் அளிக்க இந்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா உடனே நடவடிக்கை எடுத்து தங்களுக்கு தெரியப்படுத்தும் எனவும், இந்திராணியின் தாய்க்கு நேர்ந்த மோசமான அனுபவத்திற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.