மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எளிமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த மனோகர் பாரிக்கரின் அரிய புகைப்படங்கள்!
முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா மாநில முதல்வருமான மனோகர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார். பின்னர், கோவாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பிறகு, 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவாவின் முதல்வராக இருந்து வந்தார்.
கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்கள் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றுவந்தார். நாடு திரும்பிய அவர், முதல்வராக பணியாற்றி வந்தார். தீராத உடல் உபாதையிலும் அவ்வப்போது, முதல்வர் அலுவலகமும் வந்து அரசுப் பணிகளை மேற்கொண்டார்.
இருப்பினும், தொடர்ச்சியாக அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டுவந்தத நிலையில், மனோகர் பாரிக்கர் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
எப்போதும் கடமை தவறாமல் நேர்மையுடன் செயல்பட்டுவந்த மனோகர் பாரிக்கர் தனது மேஜையில் எந்த கோப்புகளையும் வெகு நாட்கள் தேங்க விடுவதில்லை. இவர் பலமுறை மக்களோடு மக்களாக இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது, வரிசையில் நின்று அரசு பேருந்துகளில் பயணம், சிற்றுண்டிகளில் உணவருந்துவது, தேர்தலின் போது மக்களோடு வரிசையில் நின்று வாக்களிப்பது என எளிமையாகவே வாழ்ந்தவர்.