மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் அட்டுழியம்; வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை திருடி செல்லும் கொடுமை..!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அமைந்துள்ள மலை கிராமங்களில் அடிக்கடி மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம்.
அதிரடிப்படை காவல்துறையினர், வயநாடு, கல்பேட்டா பகுதிகளில் இருக்கும் மலை கிராமங்களில் முகாமிட்டு பயங்கரவாதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் சில நாட்களுக்கு முன்பு வீடுகளில் உள்ள உணவு பொருள்கள் கொள்ளை அடித்து செல்லப்பட்டதாக கிராம் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தான் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருள்களை கொள்ளை அடித்து செல்கின்றனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து அதிரடி படை காவல்துறையினர், வயநாடு, கல்பேட்டா மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு சென்று, சந்தேகப்படும்படியான இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு ஆணும், பெண்ணும் துப்பாக்கியுடன் கிராமத்திற்குள் வந்தனர் என்றும் அவர்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்காணித்து சென்றனர் என்றும் மேலும் ஜோடியாக ஊருக்குள் சுற்றி வந்தனர் எனவும் மலைகிராம பெண்கள் கூறினர்.
கிராம மக்கள் கூறிய அடையாளங்களை வைத்து கிராமத்திற்குள் புகுந்து உணவு பொருள்களை கொள்ளை அடித்து சென்றது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.