மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணமகன் மாலை போடும் நேரத்தில் திடீரென கீழே இறங்கி ஓடிய மணப்பெண்.! அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார்.!
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்ய்பட்டது. இந்தநிலையில் திருமண தினத்தன்று மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.
மணமேடையில் மணமகன் தாலி கட்டுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து மணமேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். மணமகன் அருகில் நிற்க வைத்து மணமகன் கழுத்தில் மாலையை போட சொன்னார்கள். அப்போது மணப்பெண் திடீரென மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடி மணப்பெண் அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மணமகளின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. தான் ஒருவரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறினார். பிறகு, இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர்.
ஆனால் மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். இதனையடுத்து பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து, மண்டபத்தில் இருந்து அனைவரும் கலைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.