#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடனமாடிய நபர் மாரடைப்பால் மரணம்.!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடனம் ஆடிய திருமணமான நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மாவரம் என்ற பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் 24 வயதான திருமணமான நபர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனதாகவும், அவருடைய மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.