ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சகோதரனை திருமணம் செய்த திருமணமான பெண்.. வெளியான அதிர்ச்சி காரணம்!
அரசின் திட்டங்களைப் பெற, திருமணமான பெண் ஒருவர் தனது சகோதரனை மீண்டும் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்சில் நடந்த சமூக திருமணத்தில் 38 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இதில், திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசிடம் இருந்து பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த திருமணமான பெண்கள் மற்றும் ஆண்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதில், அரசின் திட்டத்தை பெற திருமணமான இளம்பெண் ஒருவர் தனது சகோதரனே திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிகாரி ஒருவர் பேசுகையில், எந்த சம்பவம் சர்ச்சையானதையுடுத்து, விசாரணை தொடங்கப்பட்டது. எந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி தம்பதிகளுக்கு அனுமதிக்கப்படாது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் திரும்ப பெறப்படும் எனவும் கூறியுள்ளார்.