#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிதி உதவிகளால் புதிய சிக்கலில் ராணுவ வீரரின் மனைவி! என்ன ஒரு சோதனை
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த குரு. இவரது மனைவி கலாவதி, வயது 25.
இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலதிட்ட உதவிகளை அறிவித்துள்ளன. இதில் பணம் மற்றும் சொத்துக்களும் அடங்கும்.
மேலும் சமீபத்தில் உயிரிழந்த நடிகர் ஆம்பரீஷின் மனைவி குருவின் குடும்பத்தாருக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் குருவின் மனைவி கலாவதிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வசதிகள் அனைத்தும், ஒருவேளை கலாவதி வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது அவரது தாயார் வீட்டீற்கு சென்றுவிட்டாலோ நமக்கு எதுவும் கிடைக்காதோ என்ற அச்சத்தில் குருவின் குடும்பத்தினர் உள்ளனர்.
இதனால் கலாவதியின் வயதுடைய குருவின் சகோதரரை திருமணம் செய்துகொள்ளுமாறு குருவின் குடும்பத்தினர் கலாவதியை கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் இதில் விருப்பமில்லாத கலாவதி மாண்டிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை செய்த போலிசார் கலாவதியை அமைதியாக இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளனர். இதுவரை எந்த வழக்கும் பதியவில்லை. சட்டத்தை மீறும் வகையில் குருவின் குடும்பத்தினர் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.