இந்த ஏ.டி.ம் கார்டுகளுக்கு தடை!! யாரோட ஏ.டி.ம் கார்டெல்லாம் வேலை செய்யாது?? முழு தகவல் இதோ.



Master debit and credit cards banned in India

மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கிராமங்கள் தொடங்கி நகர மக்கள் வரை தற்போது அனைவர் கைகளிலும் டெபிட் அல்லது கிரெடிட் உள்ளது. இந்த கார்டுகள் மாஸ்டர் கார்ட், விசா கார்ட் என பலவகைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

Master card ban

இந்நிலையில் வரும் மாஸ்டர் கார்ட் எனப்படும் மாஸ்டர் கார்ட் நிறுவன டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. அதேநேரம், ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு இந்த புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.