தெலுங்கானா மாநிலம் அதிரடியாக தடை செய்த 3 மருந்துகள்.. மாத்திரையா சுண்ணாம்பு தூளா.? மக்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.!



med-life-sciences-manufactures-fake-medicines-with-chal

இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக பொய்யாக சித்தரிக்கப்பட்ட நிறுவனம் தயாரித்த மருந்துகளில், செயலில் உள்ள மூலப்பொருட்கள் எதுவும் இல்லை என்று தெலுங்கானா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்துகளில் சுண்ணாம்புத்தூள் மட்டுமே உள்ளது அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Meg life sciences

மெக் லைஃப் சயின்சஸ் என்ற போலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று மருந்துகள் போலியானவை என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. MPOD 200, MEXCLAV 625 மற்றும் CEFOXIM-CV ஆகிய மூன்று மருந்துகளிலும் செயலில் உள்ள மூலப்பொருட்கள் எதுவும் இல்லாமல், வெறும் சுண்ணாம்புத்தூளும், மாவுசத்துமே இருப்பது தெரியவந்துள்ளது. Meg Life Sciences நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற எந்த ஒரு மருந்துகளையும் வாங்க வேண்டாம் என்று தெலுங்கானா அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மருந்துகளை உட்கொள்வதால், நமது உடல் நலனுக்கு பெரிய அபாயங்களை விளைவிக்கக்கூடும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த போலியான மருந்துகளை தயாரித்த நிறுவனம் வழங்குகின்ற எந்த ஒரு மருந்துகளையும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Meg life sciences

மெக் லைஃப் சயின்சஸ்' என்ற லேபிளைக் கொண்ட அனைத்து மருந்துகளின் விற்பனையையும் உடனே நிறுத்துமாறு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த வாரம் தெலுங்கானாவில், Cipla மற்றும் GlaxoSmithkline போன்ற புகழ்பெற்ற மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து சுண்ணாம்பு தூள் அடங்கிய போலி மருந்துகள் கடத்தப்பட்டதையடுத்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.