திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே ஒரு தும்மல்தான்.! அடுத்த நொடியே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்.! பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!!
இரவில் தனது நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்ற 18 வயது இளைஞர் தும்மியதை தொடர்ந்து மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கித்வாய்நகர் காலி பகுதியில் வசித்து வந்தவர் ஜூபைர். 18 வயது நிறைந்த அவர் இரவு 11 மணியளவில் மீரட் பகுதியில் தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிகவும் சோர்வடைந்த அவர் சில அடிகளே நடந்து சென்ற நிலையில் திடீரென நிலைதடுமாறி சரிந்து விழுந்துள்ளார். இந்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை எழுப்புவதற்கு அவரது நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஜூபைர் கண்விழிக்கவில்லை.
जिंदगी न कोई ठिकाना.........रास्ते चलते अचानक छींक आई, लड़के ने अपना गला पकड़ा और उसकी मौत हो गई. pic.twitter.com/PVtWXfZxKH
— Shubham shukla (@ShubhamShuklaMP) December 4, 2022
இந்த நிலையில் பதறிப்போன அவர்கள் உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜூபைர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தும்மல் ஏற்பட்ட சில நொடிகளிலேயே மயங்கி விழுந்து 18 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.