திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி! வயிற்றுவலியால் துடித்தவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து மிரண்டு மருத்துவர்கள்!
சில நேரங்களில் விசித்திரமான செய்திகளை நாம் வாசிப்பதும், கேள்வி படுவதும் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்து கிட்டத்தட்ட 116 ஆணிகள், இரும்பு கம்பிகள், வயர் போன்றவை குவியலாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பூண்டி பகுதியை சேர்ந்தவர் போலோ சங்கர். 42 வயதாகும் இவர் அதே பகுதியில் தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் சங்கர். இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இருப்பினும் இவரது வயிற்று வலி தீராததால் மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். எக்ஸ்ரேவில் ஏதோ பொருட்கள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் CT ஸ்கேன் எடுக்க அறிவுறித்தியுள்ளனர். இறுதியில் பொருட்கள் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்.
ஒருவழியாக அறுவை சிகிச்சை செய்து சுமார் 116 இரும்பு ஆணிகள், இரும்பு கம்பிகள், வயர் போன்ற பொருட்களை வெளியே எடுத்துள்ளனர். பெரும்பாலான ஆணிகள் 6 . 5 சென்டிமீட்டர் அளவில் இருந்துள்ளது. இவ்வளவு இரும்பு பொருட்களும் அவரது வயிற்றின் உள்ளே எப்படி வந்தது என்று இதுவரை யாருக்கும் எதுவும் தெரியவில்லை.