மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் பிடிக்காமல் தப்பியோடிய பெண்.. 13 நாட்கள் மண்டபத்திலேயே தவமிருந்த மணமகன்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டம், சௌனா கிராமத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன.
திருமணம் அங்குள்ள மண்டபம் ஒன்றில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருமணத்தில் விருப்பமில்லாத மணப்பெண் இறுதி நேரத்தில் தனக்கு வயிற்றுவலி என்று கூறி அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அவரை தேடி அலைந்து விசாரித்தபோது அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பது உறுதியாகவே, மணமகன் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் மண்டபத்தை விட்டு வெளியே வரமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்துள்ளார்.
இதனால் 13 நாட்கள் மணமகன் மண்டபத்திலேயே இருந்துள்ளார். இதன்பின் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மணப்பெண் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து திருமணம் நடைபெற்றது.