திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் பேருந்தில் பெண் பலாத்கார முயற்சி.. உயிரை காப்பாற்ற பேருந்தில் இருந்து குதித்த பெண்..!
பேருந்தில் தனியே பயணித்த பெண்ணிடம் கயவர்கள் அத்துமீற முயற்சிக்க, அவர்களிடம் இருந்து தப்பிக்க பெண் நடுரோட்டில் குதித்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள வைஷாலியில் இருந்து சிலிகுரிக்கு பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்து நள்ளிரவு நேரத்தில் பூர்ணியா பகுதிக்கு சென்றபோது, பேருந்தில் 4 இளைஞர்கள் ஏறியுள்ளனர்.
இவர்கள் பெண்மணி ஒருவர் தனியாக பயணிப்பதை கண்ட நிலையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் பதறிப்போன பெண்மணி, கயவர்களிடம் இருந்து தப்பிக்க பேருந்தின் வெளியே குதித்துள்ளார்.
நடுரோட்டில் படுகாயத்துடன் கிடந்த பெண்ணை மீட்ட வாகன ஓட்டிகள் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணிடம் விசர்நாய் நடத்தி வருகின்றனர்.