35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
காணாமல் போன பெங்களூர் பெண்ணின் உடல் பாகங்கள்... பாலித்தீன் பைகளில் மீட்பு... பீகாரைச் சார்ந்த இருவருக்கு வலைவீச்சு.!
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் பாலித்தீன் பைகளில் கட்டி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி சார்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
பெங்களூர் நகரில் ஆனேக்கல் தாலுக்கா ஜனதா காலணியில் வசித்து வந்தவர் கீதம்மா(54). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக வசித்து வந்தார். கீதா காலணியில் இவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் இருக்கிறது.
அவற்றில் ஒரு வீட்டில் தான் வசித்து விட்டு மற்றொரு வீட்டை பீகாரைச் சார்ந்த மூன்று பேருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி முதல் கீதம்மாவை காணவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஜனதா காலணியின் பல பகுதிகளில் அவரது உடல் பாகங்கள் பாலித்தீன் பைகளில் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்தது.
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் கீதம்மா காணாமல் போன அதே நாள் அவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த பங்கஜ் குமார், இந்தல் குமார் மற்றும் கௌதம் குமார் ஆகிய மூன்று பேரும் காணாமல் போயிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் பீகாரில் பதுங்கி இருப்பதை அறிந்த காவல்துறை அங்கு தலைமறைவாகி இருந்த இந்தல் குமாரை கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த பத்து வருடங்களாக ஜனதா காலணியில் தங்கி இருந்த பங்கஜ் குமாருக்கும் கீதாம்மாவிற்கும் நெருங்கிய பழக்கம் இருந்திருக்கிறது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி அவரது இரண்டு வீடுகளையும் தன் பெயரில் மாற்ற முயற்சித்து இருக்கிறார் பங்கஜ்குமார். ஆனால் இரண்டு வீடுகளும் தனது இரண்டு மகள்களுக்குமே சொந்தம் என கீதம்மா உறுதியாக கூறிவிட்டார். இதனால் திட்டமிட்டு அவரை கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக விரைவிலேயே மற்ற இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.