பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்கினால் அதிரடி ஆஃபர்.! மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!



minister announced new offer for old car

20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர்களுக்கான வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக ரீதியிலான வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தநிலையில், பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு, மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மாசுக் கட்டுப்பாடு மற்றும் தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறை தானாக நடக்கும் வகையில் புதிய வாகன கொள்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் தகுதி சான்றிதழ் வங்கும் மையங்களை அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.