திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெற்றோருக்கு டீயில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து காதலனுடன் உல்லாசம் : தலை வேறு உடம்பு வேறாக கிடந்த பரிதாபம்..!
உத்தரபிரதேச மாநிலம், மீரட் பகுதியில் உள்ள லிசாடி கேட் அருகே இளம் பெண் ஒருவரின் தலை இல்லாத உடலை காவல்தூறையினர் கண்டெடுத்தனர். இளம் பெண்ணின் உடல் லிசாடி கேட் அருகே மற்றும் சர் பிரம்மபுரி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட வாய்க்காலில் வீசப்பட்டு இருந்தது.
கொலை செய்யபட்ட அந்த இளம்பெண் ஷாலிமார் கார்டனில் வசித்துவந்த, சானியா ரிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்தூறையினர், இளம்பெண்ணின் தலையையும் தற்போது கைப்பற்றியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:-
சானியா ரிஹான் (20) தனது குடும்பத்துடன் ரிஹான் கார்டனில் வசித்து வந்தார்.அதே பகுதியை சேர்ந்த வாசிம் என்ற வாலிபரை சானியா காதலித்து வந்துள்ளார். வாசிமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினரிடம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சானியாவின் பெற்றோர்கள் ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், வாசிமை சந்திக்க மாற்று வழியை யோசித்த சானியா ரிஹான் அடிக்கடி குடும்ப உறுப்பினர்களுக்கு டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவு சானியா, வாசிமை சந்திக்க செல்ல பெற்றோர்களுக்கு டீயில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
ஆனால் சானியாவின் தாயாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அன்று இரவு டீ குடிக்காமல் தவிர்த்துள்ளார். அன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அனைவரும் தூங்கிவிட்டார்கள் என்று எண்ணிய சானியா வாசிமை சந்திக்க புறப்பட்டார். அந்த நேரத்தில் மிகச் சரியாக அவரது தாயார் அவரை பிடித்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சானியாவின் தந்தையும் தாயாரும் சேர்ந்து சானியாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடல் மற்றும் தலையை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளனர்.