கட்டுமான பணியின்போது இரயில்வே பாலம் இடிந்து விழுந்து 17 தொழிலாளர்கள் பரிதாப பலி.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!



Mizoram Bridge Collapse 17 Died 

 

வடகிழக்கு மாநிலமான மிசோராமல், இன்று இரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கட்டுமான பணிகள் நடைபெற்று வரும்போதே விபத்து நடந்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில், அம்மாநிலத்தில் உள்ள ஐசாவால் (Aizawl) நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள சைராங் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. 

40 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் பலியாகினர். 

Mizoram

அவர்களின் உடல் மீட்கப்பட்டது. எஞ்சியோரின் உடல் மீட்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவு செய்துள்ளார். 

விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் இழப்பீடும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசின் சார்பிலும் இரங்கல், நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது.