கற்களால் தாக்கி நகை, செல்போன், பணம் பறிப்பு.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. 3 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!



in Krishnagiri 3 Boys Attacked a Man 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், டேவிட் ராஜன் என்பவர் நேற்று இரவு நடந்து சென்றார். உறவினரை பார்க்க காஞ்சிபுரத்தை சார்ந்த ராஜன் (வயது 50) வந்திருந்த நிலையில், அவரின் மீது 3 பேர் தாக்குதல் நடத்தினர் .

ஒன்று சேர்ந்து தாக்குதல்

3 சிறார்கள் ஒன்று சேர்ந்து கல்லால் தாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், படுகாயமடைந்த டேவிட்டிடம் இருந்து கும்பல் செல்போன், நகை ஆகியவற்றை பறித்துச் சென்றது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த டேவிட்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: ரூ.4000 கொடுப்பா.. லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் அதிரடி கைது.!

Krishnagiri

3 பேர் கும்பல் கைது

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர், சிசிடிவி கேமிரா ஆதாரத்தின் பேரில் 3 சிறார்களை கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சிறார்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; பேருந்து - வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி.!