உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து பிரதமர் மோடியின் பதிவு!



modi talk about ayodhya judgement

ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அரசியல் சாசன அமர்வு சார்பில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பில், ஒரு பிரிவினரின் மத நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது எனவும், அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை எனவும், பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அங்கிருந்த கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனையடுத்து அயோத்தியில் 3மாதத்தில் ராமர் கோவில் கட்டும் அமைப்பை தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கான அறக்கட்டளை உருவாக்கி நிலத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடரலாம் என தெரிவித்தது. மேலும் இஸ்லாமியர்களுக்கு, மசூதி அமைக்க 5ஏக்கர் நிலம் வக்பு வாரியம் கேட்கும் இடத்தில் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தீர்ப்பு யாருக்கும் வெற்றி தோல்வியாக இருக்காது என கூறியுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அனைத்து தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.