#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி.! பிரதமர் மோடி மரண கலாய்..
உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவாவில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அம்மாநில மாநில சுகாதார பணியாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது மோடி பேசுகையில், உங்கள் அனைவரின் முயற்சியால், நேற்று ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்தியா சாதனை படைத்து உள்ளது.
கோவிட் தடுப்பூசி செலுத்தினால் காய்ச்சல் ஏற்படும் கூறப்படுகிறது. ஆனால், நேற்று 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால், இங்கு ஒரு கட்சிக்கே (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.