கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவி.! அவர்களுக்காக பிரதமர் மோடி பகிர்ந்த டுவிட்.!



modi-tweet-for-donald-trumph

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.  உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. பல நாடுகளில் முக்கிய தலைவர்களையும் கொரோனா பாதித்து வருகிறது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. 

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆ,ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து டொனால்ட்  டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி ஆகி உள்ளது. இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் மற்றும் அவரது மனைவி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி, டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மோடி தனது ட்விட்டர் பதிவில், “ எனது நண்பன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர்  கொரோனா தொற்றில் இருந்து விரைவாக மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெற விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.