தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி!! என்னவா இருக்கும்?!!
டெல்லியில் G20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயாராகி வருகிறது. மேலும், இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழ் குறித்து நாடு முழுவது பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனை தொடர்ந்து, G20 மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மண்டபத்தில் பிரமாண்டமான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,
"பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்" என்று தமிழில் பதிவு செய்திருந்தார்.
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். https://t.co/uFEcx22jgi
— Narendra Modi (@narendramodi) September 6, 2023