மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளின் திருமணத்திற்காக வந்த அப்பாவிற்கு நேர்ந்த துயரம்.! அதிரடியாக பிரபலநடிகர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!
கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் இத்தகைய கனமழையால் கடந்த ஆண்டு போலவே பெரும் வெள்ளம் மற்றும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பலர் மாயமாகியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துபாயில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரசாக் இவரது சொந்த ஊர் திருனவாயா. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளநிலையில் தனது மகளின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் கேரளா வந்துள்ளார்.
அப்பொழுது பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கிய தனது இரண்டு மகன்களின் உயிரைக் காப்பாற்றிய அவர் உயிரிழந்தார். மேலும் அவர்களது வீடு , உடமைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஷூட்டிங்கில் இருக்கும்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, உங்களுக்கு நான் இருக்கிறேன், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் உதவ முன்வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து மோகன்லால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ரசாக் குடும்பத்தினரைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து மோகன் லாலுக்கு பரத்துகள் குவிந்து வருகிறது.