மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்படித்தான் மனசு வந்துச்சோ..! 4 வயது மகளை 4 வது மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்.! அதிர்ச்சி காரணம்.!
கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூரு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தம்பதி குடும்பத்துடன் வசித்துவந்துள்ளனர். மனைவி பல் மருத்துவராகவும், கணவன் மென்பொருள் பொறியளராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் மகள் உள்ளார்.
இந்த தம்பதியின் மகள் நான்கு வயது சிறுமி செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடால் பாதிக்கபட்டு இருந்தார். இதனால் தாயார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் தனது 4 வயது மகளை 4 வது மாடி பால்கனியில் இருந்து தூக்கி எறிந்து உள்ளார்.
குழந்தை கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.