மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 வயது மகனை கழிவறையில் வைத்து கர்ப்பிணி தாயார் செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பூளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான். டாக்சி டிரைவராக இருக்கும் சுலைமானுக்கு ஷாஹிதா என்ற இளம்பெண்ணுடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் ஷாகிதா தற்போது கர்பிணியாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், ஷாகிதா அவரது மகன் ஆமில் என்பவரை கழிவறையில் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தினத்தன்று ஷாகிதாவின் கணவர் சுலைமான் குடியிருப்பில் இல்லை என கூறப்படுகிறது. சுலைமானின் குடும்பத்தினர் வழக்கம் போல வீட்டில் தூங்கினர். அப்போது அதிகாலையில், ஷாஹிதா தன்னுடைய மகன் ஆமிலை தூக்கத்தில் இருந்து எழுப்பி பின்னர் அவனை குளியலறைக்கு கொண்டு சென்று மகனை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த சிறுவன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மகனை கழுத்தை அறுத்துக் கொல்ல வேண்டும் என்று கடவுளிடம் இருந்து கட்டளை வந்ததாகவும், அதனால் தான் மகனை கொன்றதாகவும் அவர் போலீசில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் ஷாகிதாவை கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே, கொலைக்கான காரணம் மற்றும் ஷாகிதாவின் உடல் நலம் தொடர்பில் தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.