மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுக சிறுக சேமித்த பணம்.. பசிக்கு இரையாக்கிய எலி.. தெலுங்கானாவில் அதிர்ச்சி..!
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பரிகி பகுதியில் கணவனை இழந்த சிவலீலா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் நரசிம்லு கொரோனா பெருந்தொற்றின் போது உயிரிழந்துள்ளார். இதனால் சிவலீலா கூலி வேலை செய்து தனது குடும்பத்தை வழிநடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த ரூ.2 லட்சம் ரூபாய் பணத்தை ரேஷன் அரிசி பையில் கட்டி அதற்குள் மூடி வைத்துள்ளார். மேலும் சம்பவத்தன்று சிவலீலா பணத்தை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அரிசி மூட்டைக்குள் நுழைந்த எலிகள் அரிசியுடன் சேர்த்து பணத்தையும் தின்றுள்ளன.
இதனைக் கண்டு பதறிப்போன சிவலீலா எலிகள் கடித்து சேதம் அடைந்து பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வங்கி அதிகாரிகள் அவரை அலை கழித்து அலட்சியபடுத்தி உள்ளனர். இந்நிலையில் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீணாகிவிட்டதை நினைத்து கண் கலங்கி நின்ற சிவலீலாவை பார்த்த அங்கிருந்தோர் வேதனை அடைந்தனர்.