இப்படியும் ஒரு தாயா? மகன் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து 4 லட்சம் காசு பறித்த தாய்!



Mother captured son video

மகன் இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்யும் காட்சியை மகனின் தாயே வீடியோ எடுத்து அந்த வீடீயோவை வைத்து அந்த இளம் பெண்ணிடம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் 19 வயது பெண் ஒருவரை காதலிப்பதுபோல் நடித்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண் வீட்டிற்கு வந்ததும் அந்த இளைஞரின் தாயார் அந்த பெண்ணை உபசரிப்பதுபோல் நடித்து அவருக்கு இனிப்பு வழங்கியுள்ளார்.

அந்த இனிப்பில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாமல் அதை சாப்பிட அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை அந்த இளைஞர் பலாத்காரம் செய்ய, அதை அவரது தாய் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

குறிப்பிட்ட பெண் மயக்கத்தில் இருந்து எழுந்ததும் அந்த பெண்ணிடம் அந்த இளைஞரின் தாய், சகோதரி, சகோதரியின் கணவர் மூவரும் வீடியோவை காண்பித்து பணம் கேட்டு முரட்டியுள்ளனர்.

Crime

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டில் நிலம் விற்று வைத்திருந்த ரூபாய் 4 லட்சத்தை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்து விட்டார். பணம் குறித்து பெண்ணின் தந்தை கேட்டபோது நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூற, அதிர்ச்சி அடைந்த தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சம்மந்தப்பட்ட குடும்ப நபர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.