மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகனை கவ்வி சென்ற சிறுத்தை... சிறிதும் தயங்காமல் தாய் செய்த நெகிழ்ச்சி செயல்.!
தனது 8 வயது மகனை காப்பாற்ற சிறுத்தையிடம் சண்டையிட்ட தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மத்திய பிரதேசம் பகுதியை சேர்ந்தவர் கிரண் பாய்கா. அவரின் 8 வயது மகனான ராகுலை சிறுத்தை ஒன்று இறைக்காக கவ்வி கொண்டு ஓடியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சிறிதும் தயங்காமல் சிறுத்தையை தூரத்தி சென்றுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தி சென்ற கிரண் சிறுத்தையை நெருங்கியதும் அருகில் கிடந்த குத்தியை எடுத்து சிறுத்தையை தாக்க முயன்றுள்ளார்.உடனே சிறுத்தை ராகுலை விட்டுவிட்டு கிரண் மீது பாய்ந்துள்ளது.அவரும் விடாமல் தொடர்ந்து சிறுத்தையிடம் சண்டையிட்டுள்ளார்.
The woman of the village saved her little child from the leopard, this would have been the mother of real India (the land of Shivaji Maharaj)
— Odd-Purush (Odd Man) (@prevaildatruth) December 1, 2021
Not like today's gentle mother who is busy eating pizza burger and her lust, who shouts help me help me every time. #IndianMother pic.twitter.com/o5V0VRhvtZ
இந்நிலையில் கிரணின் அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்கவே அனைவரும் ஓடி வந்துள்ளனர்.உடனே சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட கிரண் பாய்கா மற்றும் ராகுலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.