மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே... வீட்டு பாடம் செய்யாததால் 5 வயது மகளுக்கு கொடூர தண்டனை வழங்கிய தாய்... டெல்லியில் பரபரப்பு!!
டெல்லி கஜூரிகாஸ் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் தனது ஐந்து வயது மகள் வீட்டு பாடம் சரிவர செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தான் பெற்ற குழந்தை என்று பாராமல் கொடூரமான தண்டனை வழங்கியுள்ளார்.
ஐந்து வயது மகளின் கை மற்றும் கால்களை நன்றாக கட்டி விட்டு வீட்டின் கூரையில் சுட்டெரிக்கும் வெயிலில் விட்டு சென்றுள்ளார். வெயிலில் பச்சிளம் குழந்தை வாடுவதை பார்த்த பக்கத்து வீட்டு காரர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இது குறித்து போலீசிலும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.