மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்ற மகளை தாயே கொலை செய்த கொடூர சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
தெலுங்கானா மாநிலத்தில் காதலித்த மகளை, பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக காதலுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதில் தங்களது பெற்ற மகளையே பெற்றோர்கள் கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஆணவ கொலை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி பார்கவி என்ற 20 வயதான இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு வெளியில் சென்ற போது, தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அப்போது அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் தாய், தனது மகளின் நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஆத்திரத்தில் தனது மகளை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே, தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.