மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரெய்டில் வசமாக சிக்கிய அதிகாரி பாத்ரூம் க்ளீனரை குடித்து ஆர்ப்பாட்டம்.. 85 லட்சம் பணம் பறிமுதல்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபாலில் மருத்துவ கல்வி துறையில் க்ளார்க்காக பணியாற்றுபவர் ஹீரோ கேஷ்வானி. இவருடைய தற்போதைய மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய். கடந்த சில மாதங்களாகவே இவரது உறவினர்களின் வங்கி கணக்குகளில் கோடி கணக்கில் பணம் டெபாசிட் நடந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த மத்திய பிரதேசத்தின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கேஷ்வானியின் வீட்டில் ரெய்டு செய்தனர். அப்போது அவருடைய வீட்டில் ரொக்கமாக ரூ.85 லட்சம் பணம் சிக்கியுள்ளது. மேலும் கோடி கணக்கில் சொத்து வாங்கியதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் கேஷ்வானி பாத்ரூம் கிளீனரை குடித்துள்ளார். அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேஷ்வானியின் அசையா சொத்துக்கள் மட்டும் 4 கோடிக்கும் மேல் வரும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இவை அனைத்தையும் வருமானமே இவ்லாத அவரது மனைவியின் பெயரிலேயே அவர் வாங்கியுள்ளார்.