மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட இளைஞரின் கால்களை கழுவி சுத்தம் செய்த ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்..! நெகிழ்ச்சியில் மக்கள்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர் தஷ்மட் ராவத் மீது, அப்பகுதியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்தார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, அன்றைய இரவே பிரவேஷ் கைது செய்யப்பட்டார். பிரவேஷ் சுக்லாவின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை பாய்ச்சப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வீட்டிற்கு பழங்குடியின இளைஞர் நேரில் வர அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சிவராஜ் சிங் சௌகான் ராவத்தின் கால்களை தனது கைகளால் கழுவி மாலை அணிவித்தார்.
நேற்று குற்றவாளி சுக்லாவின் வீடு அரசு நிலத்தில் கட்டப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் அவரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது.