மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாட்டுச்சாணம்.. ஹோமியோபதி மருத்துவரின் அசத்தல் செயல்..!
அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உள்ள வழிமுறைகளில் இதுவும் ஒன்று.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் ஹோமியோபதி மருத்துவர் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க புதிய யுக்தியை கையில் எடுத்திருக்கிறார். அதன்படி காரின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு மாட்டுச்சானத்தை கார் முழுவதும் பூசி இருக்கிறார்.
இந்த முயற்சியை மேற்கொண்ட சுஷில் சாகர் இது குறித்து தெரிவிக்கையில், "சூரிய வெப்பம் மாட்டுச்சாணத்தின் மூலமாக தவிர்க்கப்படும். இதனால் காருக்குள் ஏசியை போட்டவுடன் கார் குளுமையாக மாறிவிடும்.
அதேபோல மழை மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்து காரினை முறையாக பராமரித்து பாதுகாத்தால் இந்த யுக்தி இரண்டு மாதம் வரை கை கொடுக்கும். கடுமையாக அதிகரிக்கும். வெயிலுக்கு இது ஒரு நல்ல செயலாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.