திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிவேகத்தில் வந்து அடித்து தூக்கிய கார்.. பாஜக பிரமுகர்கள் இருவர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா (Guna Road Accident) மாவட்டம், நியூ சிட்டி காலனி பகுதியில் நேற்று இரவு பாஜக மாவட்ட தலைவர் ஆனந்த் ரகுவன்ஷி, பஞ்சாயத்து உறுப்பினர் கமலேஷ் யாதவ், மனோஜ் தாகத் ஆகியோர் சாலையோரம் நின்றுகொண்டு இருந்தனர்.
அச்சமயம், அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென சாலையோர நின்றிருந்தவர்கள் மீது மோதியது. பின் கார் சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் ரகுவன்ஷி, கமலேஷ் யாதவ் பரிதாபமாக உயிரிழந்தனர். மனோஜ் உட்பட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
गुना में हुए सड़क हादसे में भाजपा जिला मंत्री आनंद रघुवंशी मंगराना एवं सरपंच कमलेश यादव का निधन#Guna #RoadAccident #accident #RoadSafety #BusAccident #BJP #AnandRaghuwanshi #KamleshYadav #MPNews #BREAKING #CCTV pic.twitter.com/sHiyFOwozv
— Chautha Khambha (@chauthakhamba) April 10, 2024
விபத்தில் பலியான ரகுவன்ஷிக்கு மனைவி, 15 வயதுடைய மகன், 13 வயதுடைய மகள், தாய் இருக்கின்றனர். அவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அவரின் மறைவு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியினர் பலரும் நேரில் அவரின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர்.