ஆண் போலீசாக மாறப்போகும் பெண் போலீஸ்.! அரசு கொடுத்த அனுமதி.! 



mp police women turning into police men

மத்திய பிரதேச மாநிலத்தில் தீபிகா கோத்தாரி என்ற பெண் போலீஸ் ஒருவர் பெண்ணாக பிறந்திருந்தாலும் தன்னை அவர் ஆணாக உணர்ந்துள்ளார். இந்த சிக்கல்களை எதிர்கொண்ட தீபிகா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள நினைத்துள்ளார். 

police

அவர் ஒரு அரசு ஊழியர் என்பதால் இந்த அறுவை சிகிச்சைக்கு அனுமதி கேட்டு மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அரசு ஊழியர்களின் பாலின மாற்று அறுவை சிகிச்சை பற்றி அரசு விதிமுறைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. இது பற்றி அரசால் தவிர்க்க முடியாத நிலையில், பெண் போலீஸ் தீபிகா கோத்தாரிக்கு மாநில உள்துறை பாலின அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

police

அந்த அனுமதி குறித்த அறிவிப்பில் இனி பெண் ஊழியர்களுக்கான சலுகைகள் எதையும் தீபிகா அனுபவிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2021 -இல் ஆர்த்தி யாதவ் எனும் பெண் போலீஸ் இது போல பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்து அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.