திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
7 பேர் கும்பலால் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில், 16 வயதுடைய பள்ளி படிக்கும் சிறுமி 2 மைனர் சிறார்கள் உட்பட 7 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளளது.
கடந்த டிசம்பர் 19ம் தேதி சிறுமி ஷ்ஹகர்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது, தனிமையான இடத்தில் சிறுமியை சுற்றிவளைத்த 7 பேர் கும்பல், அவரை கூட்டாக சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் மைனர் சிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் 5 பேரை கைது செய்தனர். எஞ்சிய இரண்டு பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இவர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.