செல்போனால் வந்த வினை.. தந்தை திட்டிய ஆத்திரத்தில் சிறுவன் கடத்தல் நாடகம்.! 2k கிட்ஸின் அட்ராசிட்டிஸ்..!!



mumbai-living-uttar-pradesh-minor-boy-went-bangalore-af

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வந்த 16 வயது சிறுவன் 2 மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு தந்தையோடு வந்து வசித்து வந்துள்ளார். சிறுவனின் தந்தை தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 12ம் தேதி காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. 

பதற்றமடைந்த தந்தை மகனை பல இடங்களில் தேடி அலைந்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, கடந்த 19ம் தேதி அதிகாலை சிறுவன் பேசிய வாட்சப் ஆடியோ தந்தைக்கு கிடைத்தது. 

அந்த ஆடியோவில் சிறுவன் கடத்தப்பட்டார் என்றும், தான் வசமாக சிக்கி இருக்கும் காரணத்தால் என்னை தேடவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காவல் துறையினருக்கு சிறுவனின் தந்தை தெரியப்படுத்தி இருக்கிறார். 

UttarPradesh

காவல் துறையினர் நடத்திய துரித விசாரணையை தொடர்ந்து, செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் சண்டையிட்டு வந்து பெங்களூர் செல்ல இருப்பதாக நண்பர்களிடம் சிறுவன் தெரிவித்துள்ளான் என்பது உறுதியானது.

இதனையடுத்து, சிறுவனின் செல்போன் சிக்னல் வைத்து பெங்களூரில் இருப்பதை உறுதிப்படுத்திய காவல் துறையினர், சிறுவனை மீட்டு மும்பைக்கு அழைத்து வந்து காப்பகத்தில் தங்க வைத்தனர். சிறுவனை பெற்றோர் திட்டியதால் கடத்தல் நாடகம் ஆடியதும் விசாரணையில் அம்பலமானது.