திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெற்றோர்களே கவனம்.. செல்போனில் விளையாட.. 4-வது மாடியில் இருந்து குதித்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த 13 வயது சிறுமி..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மாஹிம் பகுதியில், 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை கட்டுமான அலுவலகத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த காரணத்தால், அவ்வப்போது செல்போனில் விளையாடி வந்துள்ளார்.
ஒரு சமயத்தில் சிறுமி அதிகளவு செல்போன் உபயோகம் செய்து வர, பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். கடந்த 21-ம் தேதி சிறுமியின் பெற்றோர் செல்போனை பிடுங்கி வைத்து வேளைக்கு சென்றுள்ளனர்.
இதனால் மனதளவில் உடைந்துபோன சிறுமி பெற்றோர் வேலைக்கு சென்றதும், காலை 07:30 மணியளவில் வீட்டின் அருகேயிருந்த 4 மாடி கட்டிடத்திற்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிறுமி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து மாஹிம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.