மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பர்த்டே பார்ட்டிக்கு அழைத்த நண்பர்கள்! இளம்பெண் செய்த காரியத்தால் போலீசாரே கொடுத்த செம சர்ப்ரைஸ்! என்னனு பார்த்தீங்களா!!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு, மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த சமிதா பாட்டீல் என்ற பெண் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு அவரது நண்பர்கள் குறிப்பிட்ட இடத்தைக் கூறி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வது குறித்து கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக சமிதா பாட்டீல் தனது இன்ஸ்டாகிராமில், கொரோனா நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது மட்டுமே சிறந்த பிறந்தநாள் பரிசு. கொரோனா காலத்தில் நண்பர்களின் உடல்நலனில் அக்கறை கொள்பவரே உண்மையான நண்பனாக இருக்க முடியும். எனவே எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என உரையாடியுள்ளார்.
Thank you @MumbaiPolice for making my day.
— समता (@samysays) April 22, 2021
Series of events: pic.twitter.com/64fzZkvzEs
அதனை தொடர்ந்து இந்த உரையாடல் தொடர்பான ஸ்கீன் ஷாட்டை சமிதா மும்பை காவல் துறைக்கு டேக் செய்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்தநாளையும் பொருட்படுத்தாமல் கொரோனா பரவல் குறித்தும், தனது நண்பர்களின் பாதுகாப்பு குறித்தும் எண்ணிய சமிதாவை பாராட்டும் வகையில் மும்பை காவல்துறை அவரது முகவரியை பெற்று பொறுப்புள்ள குடிமகள் எனப் பெயர் பதித்த கேக் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனை இணையத்தில் பகிர்ந்து சமிதா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.