15 வயது சிறுமியிடம் காதல் பெயரில் அத்துமீறல்.. பள்ளி வேன் ஓட்டுநர் பேருந்தில் நடத்திய விபரீத செயலால் பேரதிர்ச்சி..!



Mumbai Pune school Girl Sexual Harassment Van Driver

பள்ளியின் வேன் ஓட்டுநராக பணியாற்றிய காமுகன் சிறுமியிடம் வேன் பயணத்தின் போது காதல் மொழிபேசி பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனேவில் உள்ள கோந்தவா பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளிக்கு தினமும் பள்ளியின் பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். 

இந்த நிலையில், இந்த பேருந்தில் 35 வயதுடையவர் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், சிறுமியுடன் அவர் நெருங்கி பழகியதாக தெரியவருகிறது. இதனை பயன்படுத்தி சிறுமியிடம் அத்துமீறிய நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மகளிடம் பெற்றோர் துருவித்துருவி விசாரணை நடத்தியதில், காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி அத்துமீறிய காம ஓட்டுனரின் அட்டகாசம் அம்பலமானது. இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.