திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Viral VIdeo: என்னடா இது??.. டூவீலர் முன் அமர்ந்து ஹைவேயில் ஜாலி ரைட்; வசமாக சிக்கிய வீடியோவால் முடிந்தது ஜோலி.!
இருசக்கர வாகனத்தில் ஜோடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - தானே தேசிய நெடுஞ்சாலையானது மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். அந்த சாலை எப்போதும் மிகுந்த போக்குவரத்து நெரிசலோடு காணப்படும்.
இந்த நிலையில், MH 04 KV 4711 பதிவெண் கொண்ட இருசக்கர வாகன ஒட்டி, பிவாண்டி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தின் முன்புறம் பெண் ஒருவரை முன்புறம் அமரவைத்து ஆபத்தான வகையில் பயணம் செய்துள்ளார்.
Video of bike rider goes viral..As at busy Thane bhiwandi highway. he is riding bike sitting a girl on bike tank ..@ThaneCityPolice @MumbaiPolice @MumbaiRTO pic.twitter.com/oRL2Fe7WH6
— EXPRESS NEWS HINDI (@expressnews4u) December 22, 2022
இதனைகவனித்த மற்றொரு வாகன ஒட்டி வீடியோ எடுத்தவாறு ஜோடியை எச்சரித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர்கள் ஆபத்து சாகசத்தை கைவிட்டு பயணம் செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, தானே நகர காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.