திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதல் அம்பலமானதால் கணவன் வெறிச்செயல்; மனைவி, 2 பெண் குழந்தைகளை எரித்து கொன்ற பயங்கரம்.! நடுநடுங்க வைக்கும் சோகம்.!
தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததால் கணவன் செய்த பகீர் காரியத்தால், அவனின் உயிர் ஊசலாடுகிறது. மனைவி, 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், டோம்பிவிலியில் வசித்து வருபவர் சாந்தாராம் பாட்டில் (வயது 40). இவரின் மனைவி பிரீத்தி. தம்பதிக்கு சமீரா (வயது 14), சமிக்சா (வயது 11) என 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் தம்பதியின் வீட்டில் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் சிறுமிகள் உட்பட குடும்பத்தினர் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பிரீத்தி மற்றும் 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாந்தாராம் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரிடம் நடஜிபெற்ற விசாரணையில், சாந்தாராமுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் பிரீத்திக்கு தெரியவரவே, அவர் கண்டித்ததால் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் மற்றும் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றிய சாந்தாராம் தீவைத்து இருக்கிறார். இதில், மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சாந்தாராம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்.